• May 07 2024

இயக்குநர் ஹரிக்கு இத்தனை கோடி தான் சம்பளமா? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் தான் ஹரி. நடிகர் பிரஷாந்த் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ்  திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.

இதையடுத்து சாமி, அருள், கோவில், ஆறு என பல ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மாறினார்.


கடந்த 2022 -ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

இவ்வாறுஇருக்கையில்  விஷாலின் 34 படத்தை ஹரி இயக்கப்போவதாக போவதாக தகவல் வெளியானது. 


இதை ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்காக ஹரிக்கு 1.5 கோடி தான் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement