• Sep 30 2023

தமிழ்நாட்டில் 'பீஸ்ட்' ஐ விட பரிதாப நிலையில் 'ஜெயிலர்' வசூல்... வெறும் இத்தனை கோடி தானா..?

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படம் ரஜினி, மற்றும் நெல்சனுக்கு கம்பேக் கொடுக்குமா என்பதை அறிய பலரும் ஆவலுடன் உள்ளனர். 


ஆனால் எதிர்பார்த்தளவிற்கு தமிழ்நாட்டில் 'ஜெயிலர்' படத்திற்கு அதிகளவான வசூல் கிடைக்கவில்லை. அதாவது 'பீஸ்ட்' திரைப்படத்தை விடக் குறைவான வசூலையே பெற்றுள்ளது. அந்தவகையில் விஜய்யின் பீட்ஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் 38கோடி வசூலை பெற்றிருந்த அதேவேளையில் 'ஜெயிலர்' திரைப்படம் 28கோடியை மட்டுமே வசூலித்து இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement