• Sep 22 2023

என்னாச்சு..காதலன் அமீரை பிரேக்அப் செய்துவிட்டாரா பிக் பாஸ் பவானி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் ஆகியோர் காதலில் விழுந்த நிலையில் அதை உறுதியாகவும் அறிவித்துவிட்டனர்.

அவர்கள் எப்போதும் ஜோடியாக சுற்றும் நிலையில், எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். பாவனி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாலும், அமீர் 'இப்படியே இருக்கலாமே' என திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் தான் பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடிய பாவனி ரெட்டி தான் சிங்கிள் தான் என அளித்த பதில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமீரை பாவனி பிரேக்கப் செய்துவிட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement