• Apr 17 2026

ஒட்டுமொத்த Ghost _ம் ஒரே படத்திலா? சந்தானம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்பட்ட நடிகர் சந்தானம் ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மையான படங்கள் தோல்வியை தழுவின. 

இவருடைய நடிப்பில் இறுதியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சந்தானம் மீண்டும் காமெடியனாகவே கலக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

நடிகர் சந்தானம் நடித்த படங்களில் தில்லுக்குதுட்டு, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் திரில்லர் படங்களாகவும், வடக்குப்பட்டி ராமசாமி காமெடியான படமாகவும் ரசிகர்களை கவர்ந்ததோடு வெற்றி படமாகவும் காணப்பட்டது. வசூல் ரீதியாகவும் இந்த படங்கள் நல்ல கலெக்ஷனை பெற்றிருந்தன.


இந்த நிலையில், சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் படத்தில் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முழுமையாக நிறைவடைந்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சந்தானமும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கும் நிலையில் இதில் கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், செல்வ ராகவன், மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றார்கள். இந்த படம் மே மாத வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement