• May 04 2024

சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இந்த படத்தின் காப்பியா?- கழுவி ஊற்றி வரும் ரசிகர்கள்

stella / 8 months ago

Advertisement

Listen News!


 சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்தர், ரெடின் கிங்ஸ்லி, ஃபெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ். இந்த படம் காமெடியில் ரசிகர்களை தியேட்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைக்க படம் தியேட்டரில் கல்லா கட்டி வருகிறது.

தமிழ்நாட்டிலேயே 17 கோடி வசூலை கடந்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் உலகளவில் 25 கோடி வசூலை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில், DD Returns திரைப்படம் ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் என கூறி சர்ச்சை எழுந்துள்ளது.ஏற்கனவே இப்படம் Escape room படங்களின் சாயலுடன் பேய் படத்தை மிக்ஸ் செய்து தான் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு வந்தது.


இதனை அடுத்து ஹாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த Ready or Not என்ற படத்தின் காப்பியாகத்தான் DD Returns நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அத்தோடு இயக்குநரை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement