• Jan 19 2025

'லால் சலாம்' மிரட்டியதா? உருட்டியதா..? முதல் நாளே காலியான தியேட்டர்கள்! அடங்கிய ரஜினி ரசிகர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்றைய தினம் உலக அளவில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டில் எப்படி மதமும் அரசியலும் விளையாடுகிறது என்பதை பற்றி தான் பேசி உள்ளது.

லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான போது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


ஆனால் தற்போது லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போதும், படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்லப்படுகிறது.

அதிலும் சென்னையில் பல தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவு மந்தமாகவே காணப்படுகின்றது.

இதற்கு காரணம் ரஜினி மீது உள்ள விமர்சனங்கள், சோசியல் மீடியாவில் அவருக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், கருத்துக்கள், குறிப்பாக விஜய் ரசிகர்கள் ரஜினியை தற்போது கடுமையாக விமர்சித்து வருபவற்றை கூறலாம்.


அதன்படி லால் சலாம் திரைப்படம் வெளியான பல தியேட்டர்களின் இருக்கைகள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

வழக்கமாக ரஜினி படத்தில் முதல் நாள் காட்சியை பார்ப்பதற்கே ரஜினியின் ரசிகர்கள் போட்டி போட்டு முந்தியடிப்பார்கள்.

ஆனாலும் தற்போது முதல் நாள் முதல் காட்சியே மாஸ் இல்லை என்பது போல ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சோகமாக பதிவிட்டு வருகிறார்கள்.

எனவே லால் சலாம் திரைப்படம் வரவேற்பு பெறுமா? வசூலை குவிக்குமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement