• Jan 19 2025

இவங்களுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்களேன்.. தொல்லை தாங்க முடியலை.. ஷிவானியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் என்பதும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த பின்னர் சினிமா வாய்ப்புகள் குவியும் என்று ஷிவானி நாராயணன் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு விக்ரம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சின்ன கேரக்டர்களில் தான் நடிக்க வாய்ப்பு வந்தது, கதாநாயகி உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து இளசுகளை சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உடலை ஒட்டிய ஒரு குட்டி ஆடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் செம கிளாமராக உள்ளது. ஒரு பக்கம் இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்தாலும், இன்னொரு பக்கம் கடும் கண்டனங்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.



பொதுவாக இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை நடிகைகள் வெளியிடுவதற்கு காரணம் அதை பார்த்து யாராவது தங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பார்களா என்ற எண்ணம் தான். குறிப்பாக அனிகா சுரேந்திரன் தொடர்ச்சியாக பதிவு செய்து கிளாமர் புகைப்படங்களால் தான் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் நமக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நப்பாசையால் தான் ஷிவானி உள்பட பலர் கிளாமர் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து நெட்டிசன் தயவு செய்து இவங்களுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்க, தொல்ல தாங்க முடியல’ என்று அவருடைய வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement