• May 13 2024

ஜவான் படத்தில் தளபதி விஜய் நடிப்பது உண்மை தானா?- உறுதி செய்த முக்கிய பிரபலம்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் அட்லி. இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய பிகில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

 ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.அதனால் நிச்சய மாக படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் விஜய் நடிப்பதாக முன்பிருந்தே கூறப்பட்டு வருகிறது. 


ஆனால் அதை பற்றி உறுதியான அறிவிப்பு இதுவரை படக்குழு வெளியிடவில்லை.இந்நிலையில் தற்போது ஜவான் படத்தில் பணியாற்றி இருக்கும் ஹாலிவுட் புகழ் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் அளித்திருக்கும் பேட்டியில் தளபதி விஜய் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார்.


ஷாருக் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து ஒரு சண்டை காட்சியில் நடித்து இருக்கிரார்களாம். அந்த காட்சி நிச்சயம் எல்லோருக்கும் ட்ரீட்டாக இருக்கும் என அவர் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement