தமிழ் சினிமாவில் அதிகளவில் சிம்பு படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் கூல் சுரேஷ். தற்பொழுது படவாய்ப்புக்கள் குறைந்ததால் சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ரைமிங்காக பேசி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு, கூல் சுரேஷின் ரைமிங் வசனங்கள் பப்ளிசிட்டியாக அமைந்தது. இந்த நிலையில் இவர் அண்மையில் நடைபெற்ற சரக்கு என்னும் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளருக்கு திடீரென மாலை போட்டு வாழ்த்துத் தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் தொகுப்பாளர், மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்தது பரபரப்பானது. இதற்கு சினிமா பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, கூல் சுரேஷுக்கு பதிலாக மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இன்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ். அதில், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நினைத்து தான் அந்த பெண்ணுக்கு மாலை போட்டுவிட்டேன். அது உண்மையாகவே மிகப் பெரிய தவறு தான். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன் என பேசியிருந்தார்.
மேலும், இந்த சம்பவத்துக்கும் சரக்கு படக்குழுவினருக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் எனக் கூறி, பத்திரிகையாளர்களிடம் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இதற்கு ப்ளூ சட்டை மாறன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கூல் சுரேஷையும் விமர்சித்துள்ளார்.
கூல் சுரேஷ் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகளில் இதுபோன்று சில்லியாக நடந்துகொள்கிறார். எல்லாம் செய்துவிட்டு ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்பதும், பின்னர் மீண்டும் அதே தவறை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இப்படியான கூல் சுரேஷை மீடியாக்கள் புறக்கணிப்பதை விட்டுவிட்டு, அவரை ஊக்கப்படுத்தி வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!