• May 09 2024

கஞ்சா பூ கண்ணால பாட்டு இப்போ தேவை தானா..? கேலி செய்த முன்னாள் அமைச்சர்... கிளம்பிய எதிர்ப்புக்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான முத்தையாவின் இயக்கத்தில் உருவான படமே 'விருமன்'. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தியும், கதாநாயகியாக அதிதி ஷங்கரும் நடித்திருக்கின்றார்கள். அவர்களோடு இணைந்து கிரண், பிரகாஷ் ராஜ் உட்பட தமிழ் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றது. மேலும் தமிழ் சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து இப்படத்தினை தயாரித்து இருக்கின்றார்.




இந்நிலையில் இப்படமானது சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் படக்குழுவினருக்கு தமது வாழ்த்து மழையினை பொழிந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 475 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முதல் நாளில் மட்டும் ரூ. 8 கோடியினை வசூல் செய்திருக்கின்றது. இரண்டாம் நாளும் அதே அளவு வசூலினையே செய்துள்ளது. இவ்வாறாக இப்படமானது வசூல் வேட்டையினை நடத்தி வருகின்றது.



மேலும் அதிரடி த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசைமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான "கஞ்சா பூ கண்ணால.." என்ற பாடலானது கார்த்தியின் பிறந்தநாள் அன்று வெளியாகி இருந்தது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலுக்கு பல பாராட்டுகளும் குவிந்தன. அது மட்டுமன்றி ரசிகர்களின் மனதையும் அதிகளவில் ஈர்த்திருந்தது.



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் இப்பாடல் தொடர்பாக தனது ட்விட்டர் பதிவின் மூலமாக எதிர் விமர்சனம் ஒன்றினை கிளப்பியுள்ளார். அதாவது முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் "தமிழ்நாட்டில ஏற்கெனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க தி.மு.க அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற" என பதிவு செய்திருக்கின்றார்.


இவரின் இக்கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் கார்த்தியின் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்புக்களும் கிளம்பியுள்ளன. இதனால் இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement