• May 03 2024

வணங்கான் படத்திலிருந்து விலகிய சூர்யா... பதிலாக முன்னணி நடிகரைக் களமிறங்கிய பாலா... அது இவரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவரே இயக்குநர் பாலா. கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கி வெற்றிகண்ட பாலா சேது என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

அதாவது விக்ரம் நாயகனாக நடித்த அப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்தது. அதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து 'நந்தா' என்ற படத்தை இயக்கினார். அப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு சிறந்த நடிகராக சூர்யாவிற்கு அடையாளத்தை கொடுத்தது. 


அதுமட்டுமல்லாது 'பிதாமகன், நான் கடவுள், அவன் இவன்' போன்ற அழுத்தமான படங்களின் மூலம் ஒரு இயக்குநராக தனி இடத்தை பிடித்தார் பாலா. இவர் இயக்கத்தில் நடித்த சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உயர்ந்தனர். 

இந்நிலையில் தான் பாலா நடிகர் சூர்யாவை வைத்து 'வணங்கான்' என்ற படத்தை தொடங்கினார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது. 


அந்தவகையில் தற்போது சூர்யா இந்த படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் பாலா அறிவித்தார். இக்கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என்ற காரணத்தினால் சூர்யா விலகுவதாக தெரிவித்தார் பாலா. இருப்பினும் வணங்கான் திரைப்படம் வேறொரு ஹீரோவை வைத்து தொடங்கப்படும் என்றார். 

இதனைத் தொடர்ந்து சூர்யாவிற்கு பதில் வணங்கான் படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற செய்தியை கேட்க ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி வணங்கான் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறாராம். 


மேலும் ஏற்கனவே பாலா மற்றும் அதர்வா கூட்டணியில் உருவான 'பரதேசி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறத் தற்போது வணங்கான் படத்தின் மூலம் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இதன் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement