• May 06 2024

தளபதி 67 படத்தின் மூன்றாவது வில்லன் இவர் தானா..? ஆக்ஷன் வேற லெவலில் இருக்கப்போகின்றதே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படம் இவருடைய 69 படம் என்பதோடு இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.

மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. தளபதி விஜய்யை வைத்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வாரிசு திரைப்படம் முடியும் முன்பே தளபதி 67 குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.

இவ்வாறுஇருக்கையில் இப்படத்தில் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. அதே போல், விஜய்க்கு எதிரான வில்லி கதாபாத்திரத்தில் சமந்தா கமிட்டாகியுள்ளதாக தெரியவந்தது.

இதை தொடர்ந்து இப்படத்தில் மொத்தம் 6 வில்லன்கள் என்றும், அதில் சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் இதுவரை தேர்வாகியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது வில்லனாக பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அத்தேடு ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என்றும் தெரிவிகின்றனர். மேலும், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கலாம்.

மேலும் இப்படத்தை அடுத்த வருடம் ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு விஜய் படத்திலும் சேராத பிரமாண்ட கூட்டணி தளபதி 67 படத்தில் சேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement