அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தனுஷ் இயக்கத்தில் அவருடைய அக்கா மகன் நடித்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் அடுத்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தனுஷ் தரப்பினர் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும் ஏற்கனவே விமர்சனங்கள் வெளியாகி இருந்தன.
இந்த படத்தை பார்த்த எஸ். ஜே சூர்யாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் சாருடன் இந்த படத்தை பார்ப்பதற்கான பாக்கியம் கிடைத்தது. தரமான என்டர்டெயினர் படமாக இளைஞர்களுக்கான பக்கா பேக்கேஜ் ஆகவும் இந்த படம் உருவாகியுள்ளது. ரொம்ப பிசியானஷெட்யூலிலும் இப்படி ஒரு அழகான படத்தை எடுத்ததற்காக தனுஷை பாராட்டியும் இருந்தார்.
இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பிசினஸ் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே பெரிய நடிகர்கள் கொடுக்கக்கூடிய ஹிட்டை புதுமுக நடிகரான தனுஷின் அக்கா மகன் பவிஷ் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம் பல படங்கள் வந்து குவிய உள்ளன. அதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் வெளியாக உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தை உதயநிதி, எஸ்ஜே சூர்யா பாராட்டியது இந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து உள்ளது. இதனால் பல விநியோகஸ்த்தர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த படத்தை தனுஷ் ப்ரொடியூஸ் பண்ணி இருந்தாலும் புது முக நடிகருக்கு இவ்வளவு வெற்றி கிடைப்பது என்பது ஆச்சரியம் தான். பெரிய ஹீரோக்களுக்கு கிடைக்கும் அதே பிசினஸ் அவருக்கும் கிடைத்து உள்ளது.
இந்த படத்தில் தனுஷ் கேமியோ ரோல் பண்ணி இருந்தாலும் அவர் டைரக்டர் ஆக ப்ரொடியூசர் ஆக அவருக்கு மிகப்பெரிய ப்ரோபிட் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!