• Apr 27 2024

பிகில் பட நடிகை வர்ஷாவுக்கு திருமணமா?- மாப்பிள்ளை யார் தெரியுமா?- அவரே கொடுத்த விளக்கம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடினரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் வெளியான வெற்றி வேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான்  வர்ஷா பொல்லம்மா.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்திருந்த 96 படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிந்து வருவதால் தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் பல படங்களில் சின்ன ரோல்கள் அவருக்கு அதிகம் கிடைத்து வந்தது.இந்நிலையில் வர்ஷா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனுடன் காதலில் இருக்கிறார், விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி என வர்ஷா பொல்லம்மா விளக்கம் தெரிவித்து இருக்கிறார். 'அந்த மாப்பிள்ளை யார் என சொல்லுங்க, அப்போது தான் என் குடும்பத்தினரிடம் சொல்ல முடியும்' என அவர் கலாய்த்து இருக்கிறார். இவரின் இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement

Advertisement