பிக்பாஸ் வீட்டில் கேவலமாக நடந்துகொள்ளும் அசீமை சைகோ என திட்டி வரும் நெட்டிசன்கள் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சீரியல் நடிகரான அசீம், தன்னை ஹீரோ போல் நினைத்துக்கொண்டு ஏதோவெல்லாம் செய்து வருகிறார். டாஸ்க்குகளில் சக ஹவுஸ்மேட்டுகளிடம் அவர் பேசும் விதமும் நடந்து கொள்ளும் விதமும் ரசிகர்களை கோபப்படுத்தி வருகிறது.
நேற்றைய எபிசோடில் அமுதவாணன், தனலட்சுமி, விக்ரமன் மற்றும் ஷெரினிடம் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அத்தோடு அடுத்தவர்களை வெறுப்பேற்றுவதாக நினைத்து தனது நிலையை இழந்து அவர் நடந்து கொள்வதை பார்த்த நெட்டிசன்கள் அவரை சைகோ என திட்டி வருகின்றனர்.
அத்தோடு திருநங்கையான ஷிவ்வினின் உடல் மொழியை கேலி செய்யும் வகையில் கைகளை தட்டியும் உடலை வளைத்தும் உதட்டை சுழித்தும் அசிங்கப்படுத்தினார் அசீம். இதேபோல் அமுதவாணனிடமும், விக்ரமனிடமும் கேவலமான உடல் மொழியை காட்டி வெறுப்பேற்றினார். ஆனால் அசீம்மின் இந்த நடவடிக்கைகளை பார்த்த நெட்டிசன்கள் அவர் மீது தான் வெறுப்பை காட்டி வருகின்றனர்.
அசீம்மின் மனைவி அவரை விவாகரத்து செய்தது ஏன் என்று தற்போது தெரிந்துவிட்டது என்றும் அவர்தன்னை ஹீரோவாக நினைத்து ஏதேதோ செய்கிறார், ஆனால் அவர் காமெடியான இருக்கக்கூட தகுதியில்லை என்றும் சாடி வருகின்றனர் நெட்டிசன்கள். அத்தோடு சமூக வலைதளங்களில் அசீமை திட்டும் பலரும் கமல் இந்த வாரமாவது அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா என கேட்டு கமலின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்து வருகின்றனர்
அத்தோடு பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே மிகவும் மோசமான எரிச்சலூட்டும் போட்டியாளர் என்றால் அது அசீம்தான் என்றும் சொல்கின்றனர். சமூக வலைதளங்களில் அசீமை திட்டும் பலரும் கமல் இந்த வாரமாவது அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா என கேட்டு கமலின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்து வருகின்றனர்.
Listen News!