• May 04 2024

கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக வரும் புவனாவுக்கு இத்தனை வயதாகி விட்டதா?- திருணம் குறித்து அவர் கொடுத்த பதிலடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் கெரியரின் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இது ரீமேக் படம் தான் என்றாலும் படத்தில் வரும் காமெடி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. விஜய் அவரது தங்கையிடம் செய்யும் கலாட்டா காட்சிகளும் தான். இப்படத்தில் விஜய்யின் தங்கை புவனாவாக நடித்து பிரபல்யமானவர் தான் ஜெனிபர். இப்படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகும் நிலையில் நடிகை ஜெனிபருக்கு தற்போது 30 வயதுக்கு மேல் ஆகிறதாம்.


 மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றுவது மட்டுமின்றி அவர் காஸ்மெடிக்ஸ் பிஸ்னஸ் கூட செய்து வருகிறார்.33 வயதாகியும் திருமணம் செய்து குழந்தை பெறாததை பார்த்து சமுதாயம் பேசும் பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் ஒரு வீடியோ தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.மேலும் இவர் கில்லி மட்டுமன்றி இன்னும் சில படங்களில் நடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement