• May 07 2024

பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகின்றதா...? பகுதி-2 நடிப்பவர்கள் யார் தெரியுமா..? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாது ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்த சீரியல்  பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகிய “ஸ்ரீமோயி” என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலின் வசனங்கள் மற்றும் கதையம்சங்களை லீனா மற்றும் சங்கீதா என இரண்டு பேர் கவனித்து வருகிறார்கள்.இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜுலை 27ம் திகதி பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சதீஸ் என்கிற கோபி சீரியலில் இருந்து விடைப்பெறபோவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி தினம் தினம் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் வயது போன தோற்றத்துடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு விட்டு பாக்கியலட்சுமி-2 இல் என்னோட லுக் எப்பிடி இருக்கு என கேட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி தொடர் முடியப்போகின்றதா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.அத்தோடு அதில் நீங்கள் நடிக்கிறீர்களா எனவும் கேட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement