• May 03 2024

சர்வதேச அளவில் சாதனை படைத்த விக்ரம்- அடடே என்ன கிடைச்சிருக்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூலில் அள்ளிக் குவித்த திரைப்படம் தான் விக்ரம்.இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.இப்படம் கோலிவுட்டின் மிகப்பெரிய ஹிட் படமாக விக்ரம் மாறி இருக்கிறது.பான் இந்திய அளவில் வேற லெவல் சாதனை புரிந்த இப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்தது.


புகழ்பெற்ற பூஸான் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.சர்வதேசப் புகழ் பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக செயல்படும் 'ஓபன் சினிமா' என்ற பிரிவில் தான் விக்ரம் படம் திரையிடப்பட இருக்கிறது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.


மேலும் இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு படவாய்ப்புக்கள் குவிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு லோகேஷ் தளபதி 67 படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement