• Jan 19 2025

இந்திரஜா நீ மனோரமா மாறித்தான் வருவ! தளபதி அப்பா கூறிய அந்த வார்த்தை! உருகவைக்கும் நிகழ்வு!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சினிமாத்துறையில் இருந்துகொண்டே திரைப்படங்களால் பிரபலமாகாவிட்டாலும் அவர்கள் நிஜ வாழ்வில் நடக்கும் விடயங்களால் பிரபலமாகுபவர்கள் ஏராளம். அவ்வாறு திருமணத்தின் மூலம் பிரபலமானவரே ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா ஆவார்.


முன்னணி காமடி நடிகரான ரோபோ சங்கரின் மகளே இந்திரஜா ஆவார். இவர் அட்லீ இயக்கி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலமே பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இவறது திருமணம் மீண்டும் இவரை ட்ரெண்ட் செட் ஆக மாற்றியுள்ளது.


இதனால் பல இன்டெர்வியுகளை கொடுக்கும் இவர்களிடம் திருமணதிற்கு பிறகும் இந்திரஜா நடிப்பாரா என கேட்டபோது அவரது கணவர் "ஆம் சினிமாத்துறைக்குள் இருந்துகொண்டு நானே எப்படி தடுக்க முடியும் நான் நடிக்க அனுமதிப்பேன் மற்றும் தளபதியின் அப்பா எஸ் . ஏ சந்திரசேகர் இவளது நடிப்பை பார்த்துவிட்டு இவள் நல்ல நடிகை மனோரமா போன்று நல்ல நடிகையாக வருவார் என சொன்னார்" இவ்வாறு கூறியுள்ளார் இந்திரஜா கணவர். இது ரசிகர்களிடையே விஜய் அப்பாக்கு இவளவு நல்ல மனசா பாரபட்சம் பார்க்காமல் பாராட்டுகிறார் என கூறப்பட்டு வருகின்றது.  

Advertisement

Advertisement