• May 03 2024

இறுதிக்கட்டத்தை நெருங்கிய இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு- எப்போது முடிவடையும் தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2.இப்படத்தை  லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் முன் வந்தது. இப்படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

 இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் ரயில் விபத்து தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து சென்னையிலும், சூரத்திலும் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது.இவற்றில் சூரத்தில் நடந்த ஷூட்டிங்கை ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து வெயில், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வரும் வசந்தபாலன் இயக்கினார்.


 விறுவிறுப்பாக நடந்த சூரத் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கமல் ஹாசனுக்கான போர்ஷனையும் விரைவில் முடிக்க ஷங்கர் திட்டமிட்டதாக தகவல் வெளியானது.இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகவும் ஜூலை மாதம் இரண்டாம் தேதியிலிருந்து நான்காம் தேதிக்குள் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. 


இதற்கிடையே வயதான கதாபாத்திரத்திற்கான மேக்கப் போடுவதற்கு மொத்தம் நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும், அந்த மேக்கப் ஆறு மணி நேரம் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement