• May 05 2024

என் படத்துல நீ யார் அத சொல்ல- அஜித்திடம் மோசமாகத் திட்டு வாங்கிய பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக அல்டிமேட் ஸ்டாராக விளங்குபவர் தான் நடிகர் அஜித்.இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.அந்த வகையில் தற்பொழுது துணிவு என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.


தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்தை கடுப்பேற்றிய பிரபல நடிகை குறித்து ஒரு விடயம் வைரலாகி வருகின்றது.

அதாவது  வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிறுக்கி சிறுக்கி வந்தா பாடலுக்கு நடனமாடி பிரபல்யமானவர் தான் மரியா.இவர் அஜித்தின் அட்டகாசம் படத்தில் தீபாவளி தல தீபாவளி என்ற பாடலுக்கு அஜித்துடன் சேர்ந்து நடனம் ஆடி இருப்பார்.

அப்போது அவர் முதல் இரண்டு சரணம் நடனம் முடிந்தவுடன் அஜித் உக்காந்திரந்தாராம். அங்கே ரகசியா பெரிய நடிகர் என்று கூட ஒரு மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாராம். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கடுப்பாக்கி அவரிடம் சொல்ல போகும் போது அஜித் அது எல்லாம் வேண்டாம். மும்பையில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிவிட்டாராம்.


பின்  அடுத்த சில வரிகள் நடனமாடி முடித்துவிட்டு வந்து பேக்கப் பண்ணிடலாமா? என்று சொன்னார். இதனால் கடுப்பான அஜித் என்னுடைய படத்திற்கு நீ எப்படி பேக்கப் சொல்லலாம் என்று கோவம் அடைந்து இயக்குநரை அழைத்து இந்த பெண் இனிமேல் இந்த பாடலில் நடனம் ஆடக்கூடாது என்று சொல்கிறார். அதற்கு பிறகு அஜித்தே அந்த பாடலில் நடனம் ஆடி இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement