• May 18 2024

செல்லக் குட்டி உன்னைக் காண தவியாக தவிக்கிறேன் நானே... ரச்சிதாவை சைட் அடிக்கும் ரொபேர்ட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6 ஆவது சீசனானது தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இது கிட்டத்தட்ட 3 வாரங்களை நிறைவு செய்ய இருக்கின்றது.


ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். எந்த போட்டியாளர் யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் நாமினேஷன் ரவுண்டில் தான் போட்டியாளர்களின் இன்னொரு முகம் தெரியும்.

அந்தவகையில் சாந்தி, ஜிபி முத்து ஆகியோர் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறி விட்டார்கள். மீதமாக இருப்பது 19 பேர் மட்டுமே. இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.


அதேபோன்று மறுபுறம் காதல் லீலைகளும், ரொமாண்டிக் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது ஒரு புறம் அசல் நிவாஷினி ஜோடியின் அலப்பறைகளும், மறுபுறம் ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் காதல் பார்வைகளும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் ரொபேர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஜோடியினரை வைத்து வீடியோ ஒன்றினை எடிட் செய்து இருக்கின்றனர்.அதாவது ரச்சிதா பேசும் போது அதனை காதல் பார்வையுடன் பார்க்கின்றார் ரொபேர்ட்.

அதற்கு ரசிகர்கள் செல்லக் குட்டி உன்னை காண தவியாக தவிக்கிறேன் நானே என்ற பாடலின் bgm ஐ வைத்து எடிட் செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement