• Oct 17 2024

முதல் மாநாட்டிற்கு தயாரா? திடீர் சோதனைகளை எதிர்த்து போராடும் இளையதளபதி...

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய கோட் திரைப்படம் மூலம் பாரிய வசூலை பெற்ற நிலையில் அவர் ஏற்கனவே அறிவித்தது போல் அரசியல் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். 


ஆரம்பத்தில் வாழ்த்துச்செய்திகளை வழங்குதல் கட்சிக்கொடி அறிவிப்பு போன்றவற்றை நடத்தி வந்த அவர் தற்பொழுது இவரது தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டிற்கு தயாராகி இருப்பதாக இந்திய செய்தி வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன.


செப்டெம்பர் மாதம் மாநாட்டினை நடாத்த தீர்மானித்திருந்த விஜய் கட்சியினர் போலீசாரின் அனுமதி பெற்றிருந்தும் குறித்த திகதியில் நடத்த முடியாமல் போனது. இதனால் விஜய் தரப்பிலும் ரசிகர்கள் தரப்பிலும் அதிர்ப்த்தி ஏற்பட்டது.


இந்நிலையில் தற்போது விக்கிரபாண்டியில் உள்ள வீசாலையில் ஒக்டொபர் 27 ஆம் திகதி மாநாட்டினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் மழை காரணமாக வேலைகள் மந்தமான நிலையில் நடந்து வருகின்றனர்.  என்ன சிக்கல் வந்த போதிலும் மாநாடு செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. 

Advertisement