• May 06 2024

நீ காந்தியா காந்தி என்றால் எதுக்கு பிக்பாஸிற்குள் போகணும்- விக்ரமனை மோசமாகத் திட்டிய வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்கள் நுழைந்தனர். இவர்களில் அரசியல் பிரமுகராக போட்டியிட வந்திருப்பவர் தான் விக்ரமன்.இவர் வீட்டிற்குள. நுழைந்த நாளிலிருந்து நீதிடா...நேர்மைடா, நியாயம்டா என பேசி வருகின்றார். அதிலும் குறிப்பாக அசீம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி வருகின்றார்.

இதனால் கமல்ஹாசன் அவ்வப்போது விக்ரமன் கண்ணியமாக நடந்து கொள்வதாக பாராட்டுவதும் உண்டு.இதையடுத்து, எதற்கு எடுத்தாலும் அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்து கொண்டு வருகிறது. பொம்மை டாஸ்கில் தனலட்சுமியை அசீம் தள்ளிவிட்டபோதும், சம்மந்தமே இல்லாமல் விக்ரமன் ஆஜராகி அசீமிடம் சண்டை போட்டார்.


இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்கின் போது அமுதவாணனுக்கும் அசீமும் அடிச்சி விளையாடலாமா என்றும், வா வந்து என்னை அடி என்று சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது அசீம், அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து, தலையை திருப்பி என்னை அடி என்றார். அப்போது அமுதவாணன் என்னை அசீம் அடித்துவிட்டார் என் கூப்பாடு போட்டார்.

இதையடுத்து, ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நேற்று முடிந்த நிலையில், இந்த டாஸ்கில் அசீம் மோசமாக விளையாடினார் என்றும், டாஸ்கின் போது ஒருவர் மீது கை வைப்பது சரியில்லை என்றும், இது தவறு என்று தெரிந்தும் அசீம் வாரா வாராம் லைம் லைட்டுக்காக இதை செய்து வருகிறார் என்றார்.


அதன் பின் பேசிய அசீம், நான் லைம் லைட்டுக்காக விளையாடவில்லை, நீங்கள்தான் நான் ஸ்டாரங்கான பிளேயர் என்று தெரிந்து கொண்டு என்னை வைத்தே விளையாடுகிறீர்கள் என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி அசிங்கப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, அசீம் மற்றும் மைனா மோசமாக விளையாடியதற்காக simply waste என்ற போர்டை கழுத்தில் மாட்டப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் ரிவ்யூ கொடுத்து வரும் வனிதா, விக்ரமனின் சில செயல் எனக்கு பிடிக்கவே இல்லை. உனக்கு அறிவு இருந்தா அசீமை ஒவர் டேக் பண்ணு இல்லையா? நீ உன்னுடைய எதிரியை மாத்திக்கோ அசீமை கண்டுக்காத. அதைவிட்டு விட்டு அசீமை குறை சொல்லுவது நல்லது இல்லை. அசீம் ஸ்டாராங்கான ஆளு அவன் கூட உன்னால போட்டி போட முடியல. இதனால், அசீம் பற்றி பின்னால் பேசிக்கொண்டே இருந்தால் ஜெயிக்க முடியாது. விக்ரமன் இந்த ஸ்டேட்டர்ஜியை மாற்றிக்கொளள் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு நீ காந்தியா காந்தி என்றால் வெளில இருந்து நாலு பேருக்கு நல்லது செய்யலாம் தானே எதற்காக பிக்பாஸிற்குள் வரணும் என்று கடுமையாகத் திட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement