• Oct 16 2024

‘புருஷன் சரியில்லைன்னா உடனே விவாகரத்து பண்ணிடுங்க’… தனுஷ் பட நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு முதன் முதலாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.


 .இவர் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனிகா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த அடுத்த படங்களிலும் தனுஷ் கமிட்டாகி இருக்கிறார். 


நடிகர் தனுஷ்,  ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் மாப்பிள்ளை. இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியின் அம்மாவாக நடித்தவர் பிரபல நடிகை மனிஷா கொய்ராலா.


கடந்த 2010 ஆம் ஆண்டு நேபாளைச் சேர்ந்த தொழிலதிபரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 6 மாதத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாராம். தற்பொழுது இவர் ‘பெண்களுக்கு திருமண வாழ்க்கை சரி இல்லை என்று நினைத்தால் உடனே அதிலிருந்து வந்து விடுங்கள். மேலும் விவாகரத்து பெற்று பிரிவது தான் நல்லது’ என்று கூறி அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement