• May 04 2024

'விஜய் சேதுபதி மட்டும் இல்லை என்றால் எனக்கு அந்த படவாய்ப்பு கிடைத்திருக்காது' - வெளிப்படையாகக் கூறிய விமல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விமல் . ஆரம்பத்தில் சீரியல்களிலும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சினிமாத் துறையில் திரை பின்புலம் இல்லாமல் தனது சொந்த முயற்சியின் மூலம் போராடி ஹீரோவாக ஆன விமல் நடித்த களவாணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு வாகைசூடவா திரைப்படம் ரு பெயரை பெற்றுத் தந்தது.

இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விமல் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளை கொடுக்க ஆரம்பித்தார் . இந்த நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வர நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல் புரூஸ்லீ பட இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் தொடரில் நடித்து அசத்தியிருப்பார்.

விலங்கு வெப் தொடர் கொடுத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.நடிப்பு பயிற்சி பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே விஜய்சேதுபதி விமலும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் விமல் அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பசங்க படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி முதலில் ஆடிசன் சென்றுள்ளார் ஆனால் விஜய் சேதுபதி செலக்ட் ஆகவில்லை இந்த நிலையில் விமலை சந்தித்த போது இயக்குநர் பாண்டிராஜ் புது படம் ஒன்றை இயக்க இருக்கிறார் ஆடிசனுக்கு நான் போயிருந்தேன் செட்டாகவில்லை. அவர் கூறியது தகவல்களை வைத்துப் பார்க்கும் பொழுது அந்த கதாபாத்திரம் உனக்கு செட் ஆகும் என நினைக்கிறேன் நீ போய் இயக்குநர் பாண்டிராஜ் ஆபீஸில் பாரு என விஜய் சேதுபதி தான் எனக்கு கூறினார்.

அதன் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் சாரை சந்தித்து ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி பசங்க படத்தில் நடித்தேன். இந்த அரிய தகவலை பல ஆண்டுகளுக்கு விஜய் சேதுபதி தனக்கு செய்த உதவியை நினைவுகூர்ந்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisement

Advertisement

Advertisement