• Mar 10 2026

புகழ்,பெருமையை விட.. என் மனசாட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன்! –கீர்த்தி சுரேஷ் ஓபன்டாக்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ், தனது எளிமையான நடிப்பு, இயல்பான அழகு, கதாபாத்திரத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுதல் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் தனிப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளார். 


இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

அதன்போது அவர், " என் வாழ்வில் "ஆம்" என்பதை விட " இல்லை" என்று தான் அதிகம் சொல்லியிருக்கிறேன். அது பெரிய புகழ் தரும் படமாகவோ, பிரமாண்ட இயக்குநராகவோ இருக்கலாம்.

ஆனால், நான் எப்போதும் என் மனசாட்சிக்கு உண்மையாய் இருந்து... அதை மட்டுமே பின்பற்றியிருக்கிறேன். இன்று வரை இல்லை என்று சொன்னதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. " என்று தெரிவித்துள்ளார். 


அவரது இந்த வார்த்தைகள், சினிமாவில் பெயர், புகழ், சம்பளம் போன்றவற்றுக்காக மிகப்பெரிய முடிவுகள் எடுக்கும் சூழலில் அவர் காட்டும் தனித்துவமான தைரியம் மற்றும் நேர்மையை வெளிப்படுத்துகிறது.

கீர்த்தியின் சமீபத்திய கருத்து பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், அது உண்மையில் மிகவும் உணர்ச்சிகரமானது. பல பிரபல இயக்குநர்கள், முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்புகள் வந்த போதிலும், தனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கும் எந்த படங்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. 

Advertisement

Advertisement