• Apr 27 2024

பத்து படங்களுக்கு மேல் படங்கள் இயக்க மாட்டேன் விலகிடுவேன் - லோகேஷ் கனகராஜின் அதிரடி முடிவு

stella / 10 months ago

Advertisement

Listen News!


'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு புள்ளியில் சந்திக்கும் போது என்னவெல்லாம் நிகழும் என்பதை திக்திடுக் திரைக்கதையுடன் தந்து, தனது முதல் படத்திலேயே அனைவரையும் வியக்க வைத்தார். 

இதனால் தமிழ் திரையுலகின் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியுடன் 'கைதி' படத்தில் இணைந்தார். ஒரே இரவில் நடக்கும் கதை, அப்பா-மகள் சென்டிமெண்ட், ஹீரோயின், பாடல்கள் இல்லாத படம் போன்ற எக்கச்சக்க ஹைலைட்ஸ்களுடன், தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.


தொடர்ந்து விஜய்யை வைதது மாஸ்டர் படத்தையும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இயக்கியிருந்தார். இப்படங்கள் இரண்டுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதிலும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார்.

தற்பொழுது மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் டைட்டில் அறிவிப்புடன் துவங்கியது. 


ந்து காஷ்மீரில் 52 நாட்கள் சூட்டிங் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே தற்பொழுது அளித்துள்ள பேட்டி ஒன்றில் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்பட்டதில்லை. பத்து படங்கள் இயக்கி விட்டு குட்பை சொல்லி விடுவேன் எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement