• May 09 2024

'விவாகரத்துக்கு பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்'.. நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் ஒபன் டாக்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில்  70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "நியாயங்கள் ஜெயிக்கட்டும்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன், அருண் விஜய் நடிப்பில் வெளியான "யானை" என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

பின்பு சில ஆண்டுகளில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். 

பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், திருமணம் வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "என் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதில் எனக்கு வருத்தம் இல்லை".

"அதே போல நானும் விவாகரத்து செய்த பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதுவும் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement