• May 06 2024

எனக்கு எல்லா நடிகர்களும் உதவி செய்வார்கள் என நம்புகின்றேன்- உருக்கமாகப் பேசிய நடிகர் போண்டாமணி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையை பிறப்பிடமாக கொண்டாலும் தமிழ் சினிமாவில் வடிவெலு விவேக் போன்ற பல முன்னணி காமெடி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபல்யமானவர் தான் போண்டாமணி. இவர் அண்மையில் சிறு நீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என சக நடிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இந்த நிலையில் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் போண்டா மணியை நேரில் சந்தித்து அவருடைய சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று தெரிவித்தார்.  மேலும் நடிகர் சங்கம் சார்பாக நடிகர் மனோபாலாவும் சென்று அவருக்கு நிதியுதவி அளித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்த நிலையில் இன்று அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து நிதியுதவி அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போண்டாமணி “நான் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளேன். அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement