• Mar 20 2026

Sk எல்லாம் என்ர லிஸ்ட்டிலேயே இல்ல... போட்டியாவும் பார்த்ததில்ல.. நடிகர் ஜீவா ஓபன்டாக்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவா, சினிமாவில் தனது சிறந்த நடிப்பு திறன், கேரக்டர் தெரிவு மற்றும் ரசிகர்களுக்கு இடையிலான இணைப்பின் மூலம், ஜீவா ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தனது தொழில் அனுபவங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


அந்த பேட்டியில், ஜீவா தன்னைச் சுற்றியுள்ள நடிகர்கள் மற்றும் அவர்களுடன் உள்ள போட்டி உணர்வுகளைப் பற்றி திறந்த மனதுடன் பேசினார். 

அவர் அதன்போது, "நான் இருந்த காலத்தில வந்தவங்க தான் ரவி மோகன், தனுஷ், சிம்பு எல்லாம். அவங்கள தான் எனக்கு போட்டியாக பார்க்கிறேன். ஆனா, சிவகார்த்திகேயனோ இல்ல மற்ற நடிகர்களையோ என்னோட போட்டியாளர்களா பார்க்கல...


சிவகார்த்திகேயன் என்ன முதல் தடவை பார்க்கும் போது உங்க படத்தை எல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கேன்னு அவரே சொல்லி இருக்கார். அவரெல்லாம் என் படத்தைப் பார்த்து வளர்ந்தவர்." என்று தெரிவித்துள்ளார். 

இதன் மூலம், ஜீவா ரசிகர்களுக்கு ஒரு வெளிப்படையான பார்வையை அளித்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement