• May 09 2024

எனக்கு மூளை இல்லை - நடிகர் ஆர்யா அளித்த பேட்டியால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தை அடுத்து டாஃப் நடிகராக மாறியுள்ளவர் தான் நடிகர் ஆர்யா. இவர் தற்பொழுது 'கேப்டன்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 இப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கின்றமையால்  இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. 

இத் திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதையடுத்து இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஆர்யாவிடம் பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், " அரசியலில் வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement