• May 06 2024

என்னிடம் வேகம் இருந்தது ஆனால் தெளிவு இல்லை- வெற்றி நாயகன் சிம்பு கொடுத்த ஸ்பெஷல் இன்டர்வியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு நடிப்பில் தரமான கேங்ஸ்டர் படமாக வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


பெரியளவில் பஞ்ச் பேசாமல், ஓவர் ஆக்டிங் செய்யாமல், முத்துவாக இயல்பாக இந்த படத்தில் சிம்பு வாழ்ந்திருப்பதை பார்க்கத் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர் என்று பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறியுள்ளனர்.இப்படத்தினை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நளிலேயெ 20 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாகவும் இனி வரும் நாட்களில் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்றும் ரசிகர்களால் நம்பப்படுகின்றது.


இந்த நிலையில் இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சிம்பு பின்வருமாறு கூறியுள்ளார்.அதாவது ஆரம்பகாலத்தில் என்னிடம் ஒரு வேகம் இருந்தது. ஆனால் படங்களை எப்படி தேர்வு செய்யணும் என்ற தெளிவு இல்லை. தற்பொழுது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement