• May 19 2024

எனக்கு இனி இது வேணாம்... புதிதாக வாங்கிய காரால்... நடுத்தெருவில் சினிமாப் பிரபலம்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த 'அங்காடி தெரு' என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரிச்சர்ட் எம்.நாதன். இதனையடுத்து 'பாணா காத்தாடி, சமர், வணக்கம் சென்னை, நான் சிகப்பு மனிதன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, கத்திச்சண்டை, தொண்டன், காளி, மிஸ்டர் சந்திரமௌலி, திமிரு புடிச்சவன், மாநாடு, என்ன சொல்ல போகிறாய், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


இவ்வாறாக தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்கி வருகின்ற இவர் கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஆசை ஆசையாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி 700 மாடல் கார் ஒன்றினை வாங்கி இருக்கின்றார். அந்தக் காரால் தற்போது ரிச்சர் எம்.நாதன் வீதிக்கு வந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ரிச்சர்ட் எம்.நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "15 மாத காத்திருப்புக்கு பின் ஜூன் 1 ஆம் தேதி இந்த காரை வாங்கினேன். ஜூன் 2 ஆம் தேதி வாகன பதிவுக்குப் பிறகு 5 ஆம் தேதி காரை எடுத்துக் கொண்டு நான் வெளியே சென்றேன். 

அந்த சமயத்தில் அந்த கார் சென்னையின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் அருகே பழுதாகி நின்றது. இதனையடுத்து உடனடியாக கார் சர்வீஸ் ஊழியர்களை தொடர்பு கொண்டால் அவர்களில் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. அவர்கள் அனைவரும் போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். 


பின்னர் எனக்கு இந்த கார் வேண்டாம். நான் செலுத்திய பணம் எனக்கு வேண்டும். வெறும் 3 நாட்களிலேயே கார் பழுதாகி விட்ட நிலையில், இது வேலை செய்யும் என்பதற்கு என்ன கியாரண்டி?" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இப்பதிவை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து கேள்வியும் எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்டின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், கார் பழுதடைந்த விஷயத்தில் அவருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement