தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை நடித்து இருந்தாலும் ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகை தான் அபிநயா. இவர் நடித்த படங்களில் நாடோடிகள், பணி, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தன.
2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேனிந்தே மற்றும் கிங், சங்கமம் உள்ளிட்ட படங்களில் நடித்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தான் நடிகை அபிநயா. இவர் நாடோடிகள் படத்தில் நடித்ததை பார்த்து அவருக்கு ஏகப்பட்ட விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன.
இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் அறிவு, வீரம், ஈசன், பூஜை, தனி ஒருவன், விழித்திரு, சீதாராமன், குற்றம் 23, மார்க் ஆண்டனி, பேமிலி ஸ்டார், பணி என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.
d_i_a
இவர் மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் கொஞ்சம் கூட ரசிகர்களை சலிக்க வைக்காமல் இவருடைய நடிப்பு பிரமிக்க வைக்கும் வகையில் காணப்படும்.
இந்த நிலையில், நடிகை அபிநயா பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் வீதியில் போகும் போது சேஃப்டி கிடையாது. நான் கண்டிப்பா சேஃப்டியா பீல் பண்ண மாட்டேன். இதனால் என்னுடைய செட்டுக்கு என்னுடைய அப்பா, அம்மா இல்லை யாராவது ஒருவர் என் கூடவே இருப்பார். இது எனக்கு ஈஸியான வேலை கிடையாது.
நம்முடைய சேஃப்டியை நாம தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் ஒரு கேள்விதான் எப்படி ஒரு மாற்றுத்திறனாளியா இப்படி எல்லாம் பண்ண முடிகிறது என்று..
அவங்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடையாது.. ஆனா எங்களுக்கும் எல்லா ஸ்கில்ஸும் இருக்கு. நான் எல்லாருக்கும் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.. அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!