• May 04 2024

'அயன்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்....அடடே நம்பவே முடியல... அப்புறம் எப்படி சூர்யா வந்தாரு..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பினாலும், நடனத்தாலும் கட்டிப் போட்ட ஒருவரே நடிகர் சூர்யா. இவர் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருவது மட்டுமல்லாமல் திரைப்பயணத்தில் ஏகப்பட்ட மெகா ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துருக்கின்றார். 

அதுமட்டுமல்லாது மூன்று முறை 'தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது', மூன்று முறை 'ஃபிலிம்ஃபேர் விருது', நான்கு முறை 'விஜய் விருது' எனப் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

ஒரே படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதினையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவரது அற்புதமான நடிப்புத்திறனால் இன்றும் ரசிகர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று இருக்கின்ற இவரின் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'அயன்'. இப்படமானது இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியானது.

பெரிய எதிர்பார்பிற்கு மத்தியில் வெளியான இப்படமானது மக்களிடையே பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் பெரியளவில் வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. மேலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடும் சூர்யாவின் ஆக்‌ஷன் திரைப்படமாகவும் அயன் தான் திகழ்ந்து வருகிறது.


அப்படியான இப்படத்தின் கதையை முதன்முதலில் இயக்குநர் கே.வி.ஆனந்த் தளபதி விஜய்யிடம் தான் கூறியிருந்தாராம். ஆனால் விஜய்யோ அவருக்கு இருக்கும் குடும்ப ரசிகர்களை மனதில் வைத்து கொண்டு இப்படத்தில் நடிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டாராம். விஜய் நிராகரித்த இந்தப் படத்தில் பின்னர் தான் சூர்யா நடித்து மெகா ஹிட்டாக மாற்றியிருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement