• Apr 28 2024

கல்யாணம் ஆன பின்பும் நடிகைகளுடன் டேட்டிங் செய்த நடிகர்கள்... அடடே இவங்களுமா... நம்பவே முடியல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள் உட்படப் பல பிரபலங்களும் திருமணம் ஆன பின்னரும் வேறு நடிகைகளுடன் நெருங்கிப் பழகி டேட்டிங் செய்து வருவது வழமையான ஒன்று தான். அந்தவகையில் இவ்வாறு கல்யாணம் ஆன பின்னரும் நடிகைகளுடன் டேட்டிங் செய்த பிரபலங்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு காதல் மன்னன் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகைகளுடன் இவர் டேட்டிங் செய்துள்ளார்.

அதாவது இவர் வாணி கணபதி என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 24. அதனைத் தொடர்ந்து பின்னர் சரிகாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக வாணியை விவாகரத்து செய்துவிட்டு சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 

அதன் பின்னர் பின்னர் கவுதமி உடன் கமல் நெருக்கம் காட்டியதை அடுத்து சரிகா விவாரத்து பெற்று பிரிந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுதமியும் கமல் உடனான லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை முறித்துக்கொண்டார். இவ்வாறாக நம்ம கமல்ஹாசன் பல ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருக்கின்றார்.


அடுத்ததாக தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்தவர் போனி கபூர். பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் இவர் கடந்த 1984-ஆம் ஆண்டு மோனா கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின் நடிகை ஸ்ரீதேவியுடன் மிகவும் நெருங்கிப் பழகிய போனி கபூரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் மோனா.

போனி கபூருடனான திருமணத்துக்கு முன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்தபோதே ஸ்ரீதேவி கர்ப்பமானார். இதையடுத்து தான் அவரை கடந்த 1996-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் போனி கபூர்.


இதேபோன்று தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய பிரபுதேவா, கடந்த 1995-ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் 2010-ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் நெருங்கி பழகி வந்த பிரபுதேவா, ஒருகட்டத்தில் அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அதற்குள்ளேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் சண்டை ஏற்பட்டு பிரிந்தனர்.


அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடுகளின் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதையடுத்து நடிகை ஷோபிதா உடன் அவர் நெருங்கிப் பழகி வருவதாகவும், இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஷோபிதா பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக சினிமாப் பலரும் திருமணத்திற்கு பின்னரும் நடிகைகளுடன் டேட்டிங் செய்து வருவது தற்காலத்தில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement