• May 11 2024

நான் உண்ணாவிரதம் இருப்பேன்.. எச்சரித்த ஜிபி முத்து...திடீரென ஏன் இந்த முடிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ம் சீசனில் தற்போது ஜிபி முத்துவுக்கு தான் அதிகம் ரசிகர்கள் உள்ளார்கள்.அவர் தான் இப்போது பிக் பாஸில் நம்பர் 1 போட்டியாளர் என Ormax வெளியிட்ட ரேட்டிங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அத்தோடு ரசிகர்களும் ஜிபி முத்து அப்பாவித்தனமாக செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.அத்தோடு  ட்விட்டரில் அவருக்கு தான் அதிகம் ஆதரவும் உண்டு.


இவ்வாறுஇருக்கையில் தன்னை வெளியில் அனுப்பிவிடும்படி ஜிபி முத்து நேற்றில் இருந்து கேட்டு வருகிறார். ஆனால் அவரை பிக் பாஸ் சமாதானம் செய்யும் முயற்சியில் தான் உள்ளார்.

என்னை வெளியில் அனுப்புங்க. எனக்கு மூச்சு முட்டுகிறது. இனிமேலும் இங்கே இருக்க முடியாது. என்னை வெளியில் அனுப்பவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். என் தம்பியை வர சொல்லுங்க. நான் பேசியே ஆகணும்' என ஜிபி முத்து எச்சரித்து உள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement