• Dec 07 2022

நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கல- கமல்ஹாசனுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்த பார்த்திபன்

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் இன்றைய தினம் 68 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இதனால் இவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு  இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு! சொல்லிக் கொடுத்தேன். அள்ளிக்கொடுத்தார் அன்பை!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.