• Jan 19 2025

நான் அவங்களுடைய ஓனர் கிடையாது,பாட்னர் மட்டும் தான்- கீர்த்தி பாண்டியனை விட்டுக் கொடுக்காமல் பேசிய அசோக் செல்வன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அன்பிற்கினியாள் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை கீர்த்தி பாண்டின். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளும் ஆவார். இவர் அண்மையில் நடிகர் அசோக் செல்வனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமும் பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த வாரம் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கண்ணகி என்னும் திரைப்படம் வெளியாகி இருந்தது.இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது.


இது ஒரு புறம் இருக்க, அருண் பாண்டியனின் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் அசோக் செல்வன் கருப்பாக இருக்கும் கீர்த்தி பாண்டியனை கல்யாணம் செய்துக் கொண்டார் என பலர் கிண்டல் செய்தனர். ஆனால், கருப்பு அழகு இல்லையா? என்றும் என் மனைவி அழகி தான் என அசோக் செல்வனும் என் மருமகள் சிறந்த அழகி என அசோக் செல்வனின் அம்மாவும் மாறி மாறி பேட்டியளித்து ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கீர்த்தி பாண்டியனிடம் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்கிற கேள்வியை முன் வைத்திருந்தார். உடனே கடுப்பான கீர்த்தி பாண்டியன் இதே கேள்வியை என் கணவர் அசோக் செல்வனை பார்த்து கேட்பீர்களா என பதில் கேள்வி கேட்டு அவரை லாக் செய்து விட்டார். 


காலம் காலமாக ஹீரோயின்களை பார்த்து தான் இந்த கேள்வி முன் வைக்கப்படுகிறது. மேலும், நடிகைகள் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி வருவதை பார்த்து வருகிறோமே என அந்த தொகுப்பாளர் தொடர, ஆம் அதைத்தான் மாற்ற வேண்டும். 2023லும் அதே நிலைமை ஏன் இருக்க வேண்டும். எனக்கு புடிச்சதை நான் செய்றேன்.

 அதில், என்ன தப்பு இருக்கு.. திருமணத்திற்கு பிறகு எந்த நடிகரிடமாவது நீங்க சினிமாவில் இருந்து விலகப் போறீங்களான்னு யாராவது கேட்டு இருக்கீங்களா, நடிகைகள் என்றால் மட்டும் ஏன் இந்த கேள்வி வருகிறது என்றே புரியவில்லை என்றார். அதை தொடர்ந்து அசோக் செல்வனிடம் சிலர் இதுபற்றி சொல்ல, சரியாத்தான் சொல்லிருக்காங்க என்றும் நான் அவங்க ஓனர் இல்லை. பார்ட்னர் தான். 

என்னை திடீர்னு நடிக்கக் கூடாதுன்னு சொன்னா எனக்கு எப்படி வலிக்குமோ, அதே போலத்தான் இவ்ளோ நாள் நடிச்சிட்டு இருக்குறவங்களை திடீரென நடிக்கக் கூடாதுன்னு நான் எப்படி சொல்ல முடியும் பிரதர் என நச்சென பேசி தனது மனைவிக்கு மரியாதை கொடுத்து மாஸ் காட்டி உள்ளார். 


Advertisement

Advertisement