• May 05 2024

வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்- நடிகர் சூர்யா போட்ட முக்கிய டுவிட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா வெந்து தணிந்தது காடு  படத்தை பார்க்க காத்திருக்கிறேன்.கௌதம் மேனனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டு இருக்கின்றார்.

இன்றைய தினம் பிரமாண்டமாக அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்பு முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கதாநாயகியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் தமிழக உரிமையினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா வெந்து தணிந்தது காடு படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், "வெந்து தணிந்தது காடு படம் பற்றி நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன்.. படத்தை பார்க்க காத்திருக்கிறேன்.. கௌதம் மேனனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.


Rock on சிம்பு.. மிகப்பெரிய வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என சூர்யா ட்வீட் செய்துள்ளார்.இவரின் இந்தப் பதிவைப் பார்த்ததும் சிம்பு ரசிகர்கள் செம குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement