• May 06 2024

என்னது இன்னொரு கல்யாணமா..? மணிமேகலை கூறியதைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.. ஹுசைன் சொன்ன சூப்பரான பதில்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் சேனலில் ஆங்கராக அறிமுகமாகி பின்னர், குக் வித் கோமாளி மணியாகி, இதனைத் தொடர்ந்து இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் தொகுப்பாளினி தான் மணிமேகலை. 


இவர் லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்பு இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர். பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் தொடர்ந்து கெரியரில் முன்னேறி இப்போது ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளனர். 


மேலும் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர்கள் எப்போதுமே எதையாவது பதிவிட்டு வருவார்கள். அந்தவகையில் தற்போது பிரபல நகைக் கடை ஒன்றிற்கு சென்றுள்ள இவர்கள் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் புதிய மாடல் தாலி செயினைப் பார்த்த மணிமேகலை, "இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்தத் தாலியைக் கட்டினால் என்ன" எனக் கேட்கின்றார்.


பதிலுக்கு ஹுசைன் "எனக்கும் அது தான் தோணிச்சு" என்கிறார். அதற்கு மணிமேகலை எனக்கு தோணினது வேற, உனக்கு தோணினது வேற எனக் கூறிக் கிண்டலடிக்கின்றார். இவர்கள் இருவரது ஒற்றுமையையும் பார்த்த ரசிகர்கள் "சூப்பர் ஜோடி" எனக் கூறிப் புகழ்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement