• May 05 2024

பப்ளிக்காக ரசிகரின் காலில் விழுந்த ரித்திக் ரோஷன்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

இந்தியிலும் விக்ரம் வேதா என்று பெயர் வைத்து புஷ்கர்-காயத்ரி தான் ரீமேக் செய்துள்ளனர்.அத்தோடு  மாதவன் கதாபாத்திரத்தில் சயிஃப் அலி கானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர்.

மேலும் அந்த படம் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஆமீர் கானின் லால் சிங் சட்டா படத்தை பாராட்டி ட்வீட் போட்டார் ரித்திக் ரோஷன். இதையடுத்து விக்ரம் வேதா படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைதளவாசிகள் தினமும் ட்வீட் செய்து வருகிறார்.

ரித்திக் ரோஷன் HRX என்ற பிராண்டை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த பிராண்டின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ரித்திக்கை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். மேடைக்கு ஓடி வந்த ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனின் காலில் விழுந்தார்.மேலும்  இதை பார்த்த ரித்திக்கோ பதிலுக்கு ரசிகரின் காலில் விழுந்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.எந்த ரசிகரும் தன் காலில் விழக் கூடாதென்கிற நல்ல எண்ணத்தில் தான் ரித்திக் இப்படி செய்திருக்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.



Advertisement

Advertisement

Advertisement