• May 02 2024

தனுஷுடன் எத்தனை முறை அது நடந்தது... பிரபல நடிகையிடம் ஓப்பனாக கேட்ட நபர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் உருவான திரைப்படங்களோ ஏராளம். அதிலும் ஒரு சில படங்கள் என்றுமே மனதை விட்டு நீங்குவது இல்லை. அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'மாறன்'. 


இப்படமானது கடந்த ஆண்டு வெளிவந்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியை தழுவியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மேலும் இவர் 'பேட்ட, மாஸ்டர்' ஆகிய படங்களில் இதற்கு முன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் உருவாகும் படங்களை விட, மாளவிகா தொடர்ந்து வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் பலரும் அடிமை என்று சொல்லலாம். மாளவிகா சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்திருந்தார்.


அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்ற கேள்வியினை அவரிடம் கேட்டிருந்தார். இதற்கு நடிகை மாளவிகா மோகனன் சிறப்பான பதிலடியினை சமூக வலைத்தளத்தின் மூலமாகவே கூறி இருந்தார்.

மாளவிகாவின் பகிர்ந்து அந்த ட்விட் கூட அப்போது செம வைரலானது. இந்நிலையில் இது நடந்து பல நாட்கள் ஆன நிலையில் அந்த பதிவினை தற்போது திடீரென ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 

இதோ அந்த பதிவு..!


Advertisement

Advertisement

Advertisement