• May 06 2024

ரெட் கலர் உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ப்ரியா... எப்படித்தான் இவ்ளோ அழகாக இருக்காங்களோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் இருந்தே பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்தவகையில் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலமே கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார். 

படங்களில் மட்டுமன்றி வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் 'டைம் என்ன பாஸ்' உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு திரையில் இவரின் ஆரம்பம் சீரியலில் இருந்து தான் தொடங்கியது. அந்தவகையில் 'கல்யாண முதல் காதல் வரை' என்னும் சீரியல் மூலமே முதலில் தோன்றி இருந்தார்.


இதனைத் தொடர்ந்து விஜய் டீவியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருது, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1' போன்ற ஷோக்களில்  தொகுப்பாளராக பணியாற்றியிருக்கின்றார்.

இவர் தன்னுடைய அறிமுகப் படத்தைத் தொடர்ந்து பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், கசடதபற' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக 'மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், தங்கும் விடுதி' உள்ளிட்டவற்றிலும் தோன்றியுள்ளார். 


அதுமட்டுமல்லாது சமீபத்தில் அருண் விஜய் மற்றும் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் எஸ் ஜே சூர்யா உடன் 'பொம்மை', ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அகிலன்', லாரன்ஸின் 'ருத்ரன்', சிம்புவின் 'பத்து தல', உலக நாயகனின் 'இந்தியன் 2' உள்ளிட்ட பல படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.


எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்ற ப்ரியா தற்போதும் ரெட் கலரில் உடையணிந்து போட்டோ ஷூட் நடாத்தி அதனையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். 

Advertisement

Advertisement

Advertisement