• May 09 2024

ஆக்ஷன் ரீம் எப்படி இருக்கு - AK61 படத்திலிருந்து புதிய போட்டோவைப் பதிவிட்ட ஸ்டன்ட் மேன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித் எச்.வினோத் மற்றும் போனிகபூருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார்.AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 47 நாட்கள் படத்தின் படப்பிடிப்பானது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் ஆரம்பமானது.சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது. 


இந்த  படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார். அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இந்த ஏகே61 படத்தின் கலை இயக்குநராக மிலன் பணிபுரிய ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணிபுரிகிறார்.AK61 படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக சுப்ரீம் சுந்தர் பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சண்டைப் பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் குழுவில் உள்ள ஸ்டன்ட் மேன் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகே61 படத்தின் ஸ்டண்ட் கலைஞர்களுடன் எடுத்த‌ BTS புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement