• May 04 2024

தளபதி 67 பட பூஜையில் லோகேஷ் கொடுத்த ஹின்ட்- சீக்கிரம் சொல்லிடுங்க!-அப்போ இது LCU தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் பூஜை வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே சென்னையில் போடப்பட்டது.ஆனால் வாரிசு படத்தின் ரிலீஸிற்குப் பின்னரே தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுக்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் பூஜை வீடியோ வெளியாகியிருந்தது.

தளபதி 67 பட பூஜையில் ஒட்டுமொத்த ஸ்டார் காஸ்ட் கூட பங்கேற்கவில்லை என்பது மேலும், ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்த அளவுக்கு பாதுகாத்து வைத்த ரகசியங்கள் விமான டிக்கெட் விவரங்கள் கசிந்ததால் அப்டேட்டாக மாறிவிட்டன.இந்நிலையில், தளபதி 67 படம் LCU தான் என ரசிகர்கள் கண்டுபிடிக்க பூஜை வீடியோவில் சில ஹின்ட்டுகளையும் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றனர்.


தளபதி 67 படத்தின் காஸ்ட் அறிவிப்புகளில் அதிகமாக ரத்த சிவப்பு நிற டிசைன் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் Code Red ஹின்ட்டை எவ்வளவு தைரியமாக தலைவன் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார் பாருங்க, கண்டிப்பாக இது LCU படம் தான் என கன்ஃபார்ம் செய்து வருகின்றனர்.


அதுமட்டுமின்றி தளபதி 67 படத்தின் பூஜையில் கைதி படத்தில் நெப்போலியனாக நடித்து அசத்திய நடிகர் ஜார்ஜ் மரியன் கலந்து கொண்டது மட்டுமின்றி கடைசியாக படக்குழுவினர் மட்டும் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் அருகே நின்றபடி போஸ் கொடுத்துள்ளதை சுட்டிக் காட்டி கைதி நெப்போலியனும் இருக்காரு அப்போ இது கன்ஃபார்ம் தளபதி 67 தான் என அதிரடியாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement