• May 03 2024

"ஹாய்.. BIGG BOSS -ல இருந்து வந்தாச்சு" .. ரசிகர்களுக்காக ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது  தமிழில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில்  நடைபெற்று வருகின்றது.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டரை அசல் கோலார் சந்தித்தார். மேலும் ராபர்ட் மாஸ்டரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.

எனினும் தற்போது ராபர்ட் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். அதில், "ஹாய் எல்லாருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் பேசுறேன். இப்போ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாச்சு. பிக்பாஸ் உள்ள இருக்கும் போது எனக்கு ஓட்டு போட்ட எல்லாருக்கும், என் ரசிகர்கள், நண்பர்கள், குட்டீஸ், அம்மா, அப்பா எல்லாரும் ஓட்டு போட்டுருக்கீங்க. உங்கள் ஆதரவுக்கு நன்றி!" என ராபர்ட் மாஸ்டர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement