• May 04 2024

காதலில் கலக்கிய விஜய் தேவரகொண்டா-சமந்தா... 'குஷி' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ளாள் திரைப்படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் இன்றைய தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ்(விஜய தேவர்கொண்டா) என்ற இளைஞன் ஆராத்யா(சமந்தா) என்ற பெண்ணை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே சமந்தா மேல் காதலில் விழுந்த விஜய் தேவரகொண்டா தன் காதலுக்காக எதை எதையோ எல்லாம் செய்கிறார். 

பின்னர் ஒரு கட்டத்தில் சமந்தாவும் அவர் காதலை ஏற்றுக் கொள்கின்றார். இருப்பினும் சமந்தா-விஜய் தேவரகொண்டா இருவரது காதலிற்கும் அவர்களின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு பெரும் தடையாக அமைகிறது.

இதனைத் தொடர்ந்து வீட்டாரை எதிர்த்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவடைய திருமண வாழ்க்கை ஆரம்ப காலகட்டத்தில் சந்தோசமாக போனாலும், போகப்போக இவர்களுக்குள் வரும் சின்ன சின்னச் சண்டைகள் கூட இவர்களின் இல்லற வாழ்வை கசப்பாக்குகிறது.

இவ்வாறாக இவர்கள் இருவருக்குள்ளும் எதனால் சண்டை வருகிறது? சண்டைக்கு பின், இவர்கள் எப்படி சேர்க்கிறார்கள்? என்பதே இப்படத்தின் உடைய மீதிக் கதையாக அமைந்துள்ளது.


படம் எப்படி 

இயக்குநர் ஷிவா நிர்வானா குஷி படத்தின் கதையை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார் எனக் கூறலாம். அதாவது காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என  அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் அமைந்துள்ளது.

நடிகர்களின் நடிப்பு 

சமந்தா-விஜய் தேவரகொண்டா இருவரதும் கெமிஸ்ட்ரியும் ரொம்ப அழகாக உள்ளது. 

அதேபோன்று விஜய் தேவரகொண்டாவின் அப்பாவாக நடித்த சச்சின் கெட்டேகர் நாத்திகவாதியாகவும் பிள்ளையை பெற்ற தந்தையாகவும் சூப்பராக நடித்துள்ளார்.

மேலும் கதாநாயகனின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் குறை ஏதும் சொல்ல முடியாத அளவிற்கு அமோகமாக நடித்துள்ளார். 

மேலும் கதாநாயகியின் அப்பாவான முரளி ஷர்மாவின் நடிப்பும் சூப்பராக உள்ளது.  

பலம், பலவீனம் 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் செம ஹிட்டாக உள்ளன.

இருப்பினும் படத்தின் முதல் பாதி நீண்டு கொண்டே போனதால் அங்கு சற்று தொய்வு ஏற்பட்டது. ஆகவே படத்தின் நீளம் ஒரு மைனஸ் பாயிண்டாக உள்ளது. 

தொகுப்பு 

மொத்தத்தில் குஷி படத்தை, லவ்வருடனோ அல்லது நண்பர்களுடனோ திரையரங்கிற்கு சென்று ஃபீல் பண்ணி பார்க்க முடியும்.

Advertisement

Advertisement

Advertisement