• May 08 2024

அந்தப் பயம் இருக்கட்டும்... பிக்பாஸையே மிரட்டிய கூல் சுரேஷ்... முதல் நாளே இப்படியா.. வெளியானது வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன்-7 நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஏனைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


ஏனெனில் அலப்பறைக்கு சற்றுமே பஞ்சம் இல்லாத நடிகர் கூல் சுரேஷும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருப்பது தான். அதாவது சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் வெறித்தனமான ரசிகர் என்றால் அது கூல் சுரேஷ் தான். 

அந்தவகையில் சமீபகாலமாக இவர் திரைப்படங்களை வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனையடுத்து இவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் களமிறங்கி இருப்பதால் கண்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது எனப் பலரும் கூறி வருகின்றனர்.


இந்நிலையில் பிக்பாஸிற்கு கூல் சுரேஷ் ஆர்டர் போடும் வகையில் அமைந்த ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் கூல் சுரேஷை பிக்பாஸிடம் ட்ரெஸ் அனுப்பி வைக்குமாறு கேட்கும்படி சக போட்டியாளர்கள் கூறுகின்றனர்.


பதிலுக்கு கூல் சுரேஷ் தனது பாணியில் "வெந்து தணிந்தது காடு, வீட்டுக்குள்ள துணியை தூக்கிப் போடு" என்கிறார். இதனைக் கேட்டு சக போட்டியாளர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அத்தோடு பிக்பாஸும் துணியை அனுப்பி வைக்கின்றார். 


பின்னர் சந்தோஷத்தில் கேமெரா முன் போன கூல் சுரேஷ் "என் பவர் தெரிஞ்சுதா, வெந்து தணிந்தது காடு, பிக்பாஸிற்கு வணக்கத்தை போடு, ட்ரெஸ்ஸை தூக்கிப் போடு, அந்தப் பயம் இருக்கட்டும்" என்கிறார். 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement